தலச்சிறப்பு |
சூரியன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் 'பரிதிநியமம்' என்ற பெயர் பெற்றது. 'பரிதி' என்றால் 'சூரியன்'.
மூலவர் 'பாஸ்கரேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். 'பரிதியப்பர்' என்னும் அழைக்கப்படுகிறார். சூரியன் மூலவரை வழிபட்டதைக் குறிக்கும் வகையில் அவர் எதிரில் சூரியன் உள்ளார். அம்பாள் 'மங்கள நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு, அவர் அருகில் அனுமன், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்கு 3 சண்டேஸ்வரர்கள் உள்ளனர். பிரகாரத்தில் சிவ விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், கஜலட்சுமி, நடராஜப் பெருமான், இவருக்கு சடைமுடி இல்லை, சரஸ்வதி, மகாகால பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சிவபெருமான் கருவறை கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவுடன் அனுமன் இருப்பது வேறெந்த தலத்திலும் இல்லை.
மார்க்கண்டேயர், சூரியன் வழிபட்ட தலம்.
பங்குனி மாதம் 18, 19, 20 ஆம் தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும் சூரிய பூஜை நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|